உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ல் உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலையான நுகர்வோர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத மற்றும் பருவநிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் நுகர்வோரின் பயன்பாடு இருக்க வேண்டும் என இந்தாண்டு மையக்கருத்து விளக்குகிறது.
சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960 ஏப்., 1ல் தொடங்கப்பட்டது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. 1962ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். இதையடுத்து 1983 மார்ச் 15ல் இத்தினம் உருவாக்கப்பட்டது.

No comments:
Post a Comment