LightBlog

Post Top Ad

LightBlog
LightBlog

Monday, March 16, 2020

`மூன்று வருடங்களாக நம்மைச் சுற்றிவருகிறது!’- பூமியின் மற்றொரு குட்டி `நிலா'

`மூன்று வருடங்களாக நம்மைச்  சுற்றிவருகிறது!’- பூமியின் மற்றொரு குட்டி `நிலா'

பூமியைச் சுற்றி வரும் புதிய குட்டி நிலவு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக `மைனர் பிளானட் சென்டர்' (Minor Planet Centre) அறிவித்துள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம். இந்த நிலவு நம்முடன் நீண்ட காலத்திற்கு இருக்காது எனவும் MPC தெரிவித்துள்ளது.

இந்தக் குட்டி நிலவுக்கு `2020 CD' எனப் பெயரிட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வது இயல்புதான். இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள `2020 CD'-யானது பூமியை ஒரு முறை சுற்றி வந்துள்ளது. இது போன்ற கற்களின் செயல்பாட்டைக் கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றின் ஆதிக்கமும் இந்தப் பொருள்களின் மீது இருப்பதால் இவற்றின் பாதை எந்த நேரமும் மாறுபடும்.

இந்தக் குட்டி நிலவு, பூமியை மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால் இது அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விடும். அப்படி மோதாத பட்சத்தில் பூமியைச் சில சுற்றுகள் சுற்றி விட்டு பின்பு சூரியனை நோக்கிச் சென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இது போன்ற பொருள்களை `குவாசி சாட்டிலைட்' (Quasi Satellite) என அழைக்கின்றனர். 1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு '1991 VG' என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. இது மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள 2020 CD எவ்வளவு நாள்கள் நம்முடன் இருக்கும் எனத் தெரியாது. ஆனால், சில நாள்களுக்கு நம் சந்திரனுக்கு ஒரு குட்டி சகோதரன் கிடைத்துவிட்டான் என்று மட்டும் தெரிகிறது.

No comments:

Post a Comment

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ!

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ! எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்து...

LightBlog

We’ll never share your email address with a third-party.