LightBlog

Post Top Ad

LightBlog
LightBlog

Monday, March 16, 2020

வியாழன் வளிமண்டலத்தில் தண்ணீர் மூலக்கூறுகள்

வியாழன் வளிமண்டலத்தில் தண்ணீர் மூலக்கூறுகள்

வியாழன் கிரகத்தின் வளி மண்டலத்தில் காணப்படும் மூலக்கூறுகளில் 0.25 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான 'நாசா'வின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன். வாயுக்கள் சூழ்ந்த இந்த கிரகத்திற்கு பல சந்திரன்கள் உள்ளன. நாசா 1989ல் 'கலிலியோ' விண்கலத்தை வியாழன் ஆய்வுக்கு அனுப்பியது. அது 1995ல் வியாழன் கிரகத்தின் துணை கோளான 'யூரோப்பா'வில் 10.கி.மீ. அளவிற்கு கனமான ஐஸ் கட்டி படிவங்கள் உள்ளதாக தெரிவித்தது. அதனால் பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.இந்நிலையில் 2011ல் நாசா வியாழனை ஆராய 'ஜூனோ' விண்கலத்தை அனுப்பியது. இது அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் நாசா விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:வியாழன் கிரகத்தின் மத்திய ரேகை சூரியனை விட மூன்று மடங்கு பெரியது. இதன் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளில் 0.25 சதவீதம் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் திரவ வடிவில் இல்லாமல் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் என வாயு வடிவில் உள்ளது.அண்டத்தில் முதன் முதலாக வியாழன் கிரகம் தான் உருவாகியிருக்க வேண்டும். அதில் பெருமளவு வாயுக்களும் துாசிகளும் இருந்திருக்க வேண்டும். இவை சூரியனில் கிடையாது. அதனால் வியாழனில் தண்ணீர் இருப்பின் அளவை அறிந்தால் தான் அது உருவான விதம் குறித்த ஆய்வுகளை உறுதிப்படுத்த முடியும். ஆனால் வியாழன் வளிமண்டலத்தில் பரவலாக தண்ணீர் இருந்திருக்கும் என்பதை இதுவரை யாரும் ஊகிக்கவில்லை. தற்போது அது குறித்த செய்தி ஆச்சரியம் அளிக்கிறது. இது மேலும் பல ஆய்வுகளுக்கு வித்திட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ!

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ! எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்து...

LightBlog

We’ll never share your email address with a third-party.