காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
'காலநிலை மாற்றத்தால், உலக சராசரி வெப்பநிலை இன்னும் 1.5 டிகிரி செல்சியசிற்கு மேல் சென்றால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்து விடும். கடல் நீர் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும். ஆஸ்திரேலியா காட்டுத்தீ அதற்கோர் ஆரம்பம்தான்' என, காலநிலை உச்சி மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடந்த, காலநிலை உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது: அன்டார்டிகா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகள் காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இது, உயிரினங்களின் தாங்குதிறனைத் தாண்டி புவி வெப்பமடைந்து வருகிறது.குறிப்பாக, உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும், 1.5 டிகிரி செல்சியசிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவானால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்து விடும். அப்படியான நிலை வந்தால், கடல் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும்.
அமேசான், கிரீன்லாந்து போன்ற பூமியின் பெரும்பகுதி கரிமத்தைக் கிரகித்து வைத்துள்ள பகுதிகள் அழிந்து, மில்லியன் கணக்கிலான டன் கரிமத்தை வளிமண்டலத்தில் வெளியிடும்.ஆஸ்திரேலிய காட்டுத்தீ மனித நாகரிகத்தின் முடிவுக்குக் கிடைத்த ஓர் எச்சரிக்கை. கொதித்துக்கொண்டிருக்கும் பூமியில் உயிர்த்திருப்பதற்கும் மரணிப்பதற்கும் நடுவிலான இடைவெளியை இந்தக் காட்டுத் தீ சேதங்கள் உரைக்கின்றன. அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உடனடி நடவடிக்கை தேவை.இவ்வாறு அந்த மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம் மனித சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பிற்கும், பேராபத்தாக உருவெடுத்து வருவதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, தேசியளவில் மட்டுமின்றி உலக அளவில் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதே இந்தப் பேராபத்திலிருந்து தப்பிப் பிழைக்க முடியும். மாறாக, காலநிலை மீது அக்கறை கொண்டு பேசும் தன்னார்வலர்களையும் ஆய்வாளர்களையும், 'முட்டாள்களின் வாரிசுகள்' என, வல்லரசு நாடுகள் இழிவுபடுத்தி இன்புறுவது அபத்தத்தின் உச்சமே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment